திரிதெந்தின் திவ்விய பலி பூசை - Traditional Latin Mass (Part 1)


திவ்விய பலி பூசையின் சாதாரண பாகம்

முதல் பாகம்

ஆயத்தப் பூசை : உபதேச பாகம்
பலியோடு சேராத பாகம்
முதல் பிரிவு
ஆயத்தம்: தீர்த்தம் தெளித்தலிருந்து சபை செபம் வரையில்
குரு பூ+சை உடுப்புகளை அணிந்து கொண்டு பாத்திரத்தை கையிலேந்தி பீடத்தின் முன் நடுவே தரையில் முழந்தாட்படியிட்டுப் பீடத்திலேறிப் பாத்திரத்தை மத்தியில் வைத்த பின், g+சைப்புத்தகத்தினிடம் போய், அன்றைய பாகத்தைத் திறந்த வைத்தபின், நடுவில் வந்து மேல ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாடுபட்ட சுரூபத்தை நோக்கி சிரம் பணிந்து கீழே வருகிறார்.
பீடத்தினடியில் - ஆரம்பச் செபங்கள்
-முழந்தாட்படியிடவும்
(குரு சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு தெளிவான குரலோடு)


சங்கீதம் 42

குரு: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடேயும்
           Confíteor Deo omnipoténti,
குரு: ஆமென்
         Amen.

மக்கள்: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடேயும் எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயுடனேயும் பிரதான சம்மனசாயிருக்கிற முத்தான மிக்கேலுடனேயும் ஸ்நாபகனாயிருக்கிற முத்தான அருளப்பனுடேயும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடேயும் சின்னப்பருடனேயும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும் எனக்கு குருவாயிருக்கிற உம்முடனேயும் பாவசங்கீர்த்தனம் செய்கிறேன்.
                எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாளையும் பிரதான சம்மனசாயிருக்கிற முத்தான மிக்கேலையும் ஸ்நாபகனாயிருக்கிற முத்தான அருளப்பரையும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பரையும் சின்னப்பரையும் சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் எனக்கு குருவாயிருக்கிற உம்மையும் நம்முடைய ஆண்டவரிடராயிருக்கிற சர்வேசுரனிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

      Confíteor Deo omnipoténti, beátæ Maríæ semper Vírgini, beáto Michaéli Archángelo, beáto Joanni Baptístæ, sanctis Apóstolis Petro et Paulo, ómnibus Sanctis, et tibi, Pater:

      quia peccávi nimis cogitatióne, verbo et ópere: mea culpa, mea culpa, mea máxima culpa.
     Ideo precor beátam Maríam semper Vírginem, beátum Joánnem Baptístam, sanctos Apóstolos Petrum et Paulum, omnes Sanctos, et te, Pater, oráre pro me ad Dóminum Deum nostrum.

மக்: ஆமென்.



எல்லோரும் சிரம் வணங்கி

(சங். 84: 7-8)















     
5. குரு பீடத்தை நோக்கி ஏறுதல் - The priest ascends the altar and says silently:

பீடத்தை முத்தி செய்தல்



குரு பீடத்தின் மேல் கரங்களைக் குவித்து வைத்து

            ஆண்டவரே, இங்கு எந்தெந்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய பரிசுத்த பண்டங்கள் இருக்கின்றனவோ (பீடத்தை முத்தி செய்து) அவர்களுடையவும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் பேறுபலன்களைக் குறித்து என் பாவங்களையெல்லாம் மன்னிக்கத் தயை செய்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம் - ஆமென்


6. பாடற்பசையில் பீடத்திற்கு தூபமிடல்

(இப்போது MC சங்கைக்குரிய தந்தையே, ஆசீர்வதித்தருளும்என்று சொல்லிக் கொண்டு சாம்பிராணியைக் கொடுக்கிறார்.  குரு, தூபத்தில் சாம்பிராணியைப் போட்டு, “யாருடைய மகிமைக்காக எரிக்கப்படுவாயோ அவராலேயே ஆசீர்வதிக்கப்படுவாயாகஎன்று சொல்லிக்கொண்டு சிலுவை அடையாளத்தால் ஆசீர்வதித்து, பாடுபட்ட சுருபத்திற்கும், பீடத்திற்கும் தூபங்காட்டுகிறார்.  அதன்பின் MC குருவுக்கு தூபமிடுவார்.  இந்த சடங்கு, மரித்தோர் பூசையில் நடப்பதில்லை)

At a high Mass the priest will incense the altar. While blessing the incense the priest says:


7. பிரவேச வாக்கியம் - Introitus


            குரு g+சைப் புத்தகத்தண்டை சென்று பிரவேச வாக்கியத்தின் முதல் நான்கு வார்த்தைகளை சொல்லிக்கொண்டே, தம்மீது சிலுவை அடையாளத்தை வரைந்து திவ்விய பூசையை ஆரம்பிக்கிறார்.  இவ்வாக்கியம் ஒவ்வொருநாளும் செய்யப்படும் பூசையின் கருத்துக்கு ஏற்றவாறும் திருநாளுக்குத் தக்க வாறும் வேறுபடும்.


Moving to the right side of the altar the priest makes the sign of the cross and reads the Introit.

8. கிருபை மன்றாட்டு  Kyrie

            குரு பீடத்தின் நடுவே சென்று இக்கிருபை மன்றாட்டை பிதா (Kyrie), சுதன் (Christe), இஸ்பிரித்து சாந்து (Kyrie) ஒவ்வொரு ஆளுக்கும் மும்முறையாக வேண்டுகிறார்.  பாடற் பூசையில் இதைப் பாடுவார்கள்.
                        குரு: சுவாமி கிருபையாயிரும்
                        மக்: சுவாமி கிருபையாயிரும்.
                        குரு: சுவாமி கிருபையாயிரும்.
                        மக்: கிறிஸ்துவே கிருபையாயிரும்
                        குரு: கிறிஸ்துவே கிருபையாயிரும்
                        மக்: கிறிஸ்துவே கிருபையாயிரும்
                        குரு: சுவாமி கிருபையாயிரும்
                        மக்: சுவாமி கிருபையாயிரும்.

                        குரு: சுவாமி கிருபையாயிரும்.

The priest returns to the middle of the altar and joins his hands.



9. சம்மனசுகளின் கீதம்- Gloria

            குரு கரங்களை உயர்த்தி, சிரம் சிறிது குனிந்து சொல்லுகிறார்.  பாடற் பூசையில் இது பாடப்படும்.
                ஆகமண காலத்திலும் தபசு காலத்திலும் மரித்தோர் பூசையிலும் இது சொல்லப்படுவதில்லை.

1.ன்னதங்களிலே (சிரம் வணங்கி) சர்வேசுரனுக்கு மகிமையும், பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாவதாக.
2. நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்.
3. உம்மை வாழ்த்துகிறோம்
4. (சிரம் வணங்கி) உம்மை ஆராதிக்கிறோம்
5. உம்மை மகிமைப்படுத்துகிறோம்.
6. உமது மேலான மகிமையினிமித்தம் (சிரம் வணங்கி) உமக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகிறோம்)
7. தேவனாகிய ஆண்டவரே, பரலோக இராசாவே, சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரா,
8. ஏக குமரானாய் பிறந்து சுதானாகிய ஆண்டவரே, (சிரம் வணங்கி) சேசு கிறிஸ்துவே
9. தேவனாகிய ஆண்டவரே, சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையே, பிதாவின் குமாரனே.
10. உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
11. உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, (சிரம் வணங்கி) எங்கள் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும்.
12. பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
13. ஏனெனில் நீர் ஒருவர் மாத்திரமே பரிசுத்தர்.
14. நீர் ஒருவர் மாத்திரமே ஆண்டவர்.
15. நீர் ஒருவர் மாத்திரமே மகா உன்னதமானவர். 
 (சிரம் வணங்கி) சேசுக் கிறீஸ்துவே
16. (சிலுவை அடையாளம் வரைந்து) இஸ்பிரீத்துசாந்துவோடு பிதாவாகிய சர்வேசுரனின் மகிமையில் வீற்றிருக்கிறீர்.

17. ஆமென்.

The Glória is not said during Lent, Advent, Septuagesima and Masses for the Dead.
Stand at a high Mass
The priest extends his hands and then rejoining them begins the Gloria. The people may join after the first phrase.

Comments